வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர் வரி வருமானம்
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக, வாகனங்கள் உட்பட சுமார் 2000 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.
ஆனால் நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.
இறக்குமதி தடை
அதற்கமைய, வாகன இறக்குமதி தடை நீங்கினால் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சுமார் 750 மில்லியன் டொலர்களை வரியாக ஈட்ட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட போதும், ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
வாகன இறக்குமதியாளர்களின் தகவலுக்கமைய, தற்போது மிகவும் மதிப்புமிக்க வாகனம் மின்சார வாகனம் ஆகும். அதில் ஒன்று குறைந்தது 2 கோடி ரூபாயாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |