அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்

Donald Trump United States of America Iran
By T.thibaharan May 26, 2026 09:27 AM GMT
Report

ஈரானின் அணுச்சறிவூட்டலுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் நடவடிக்கைகள் அறிவிக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்டு அறிவிக்கப்படாமலே முடிவடைந்து இருக்கிறது. யுத்தம் முடிவடைந்து விட்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஆயினும் யாரும் யுத்தம் முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதில் இருந்து அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றே கருதவேண்டும். இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க யுத்தமும், மத்தியகிழக்கில் ஈரானின் அணுச் செறிவூட்டல், ஆராய்ச்சி, தொழில்நுட்ப விருத்தி ஆகியவை பற்றி ஆய்வது அவசியமானது.

முதலில் யத்தம் பற்றி பார்ப்போமானால் அமெரிக்காவின் 1973ம் ஆண்டின் “War Powers Resolution” சட்டப்படி, ஜனாதிபதி காங்கிரஸின் அனுமதி இல்லாமல் யுத்தத்திற்கு படைகளை பயன்படுத்தினால், 60 நாட்களுக்குள் காங்கிரஸ் அனுமதி பெறவேண்டும். 

சற்று முன்னர் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

சற்று முன்னர் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரான் மீதான தாக்குதல்கள்

28-02-2026 ல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது 01-05-2026 உடன் ஈரான் மீதான தொடர் தாக்குதல்கள் 60 நாள் கடந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம்(காங்கிரஸ்) இதுவரை டிரம்பின் ஈரான் மீதான தொடர் இராணுவ நடவடிக்கையை 60 நாள் கடந்தும் தொடர்வதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் (Authorization for Use of Military Force / AUMF) வழங்கவில்லை.மே1ம் திகதியுடன் 60 நாள் காலவரம்பு முடிந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகமோ “ஏப்ரல் 7 ceasefire காரணமாக hostilities முடிந்துவிட்டது. அதனால் 60 நாள் கணக்கு நிற்கிறது” என்று வாதிடுகிறார்கள். இந்நிலையில் 13-05-2026 அன்று செனட்டில் தற்போது ஜனாதிபதிக்குரிய போர் அதிகாரத்தை மேலும் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரனைத் தீர்மானம் 49-50 வாக்குகளால் தோல்வியடைந்ததை அமெரிக்காவின் 1973 ஆம் ஆண்டின் “War Powers Resolution” தோல்வி என தவறாக கருதகடகூடாது. அதாவது காங்கிரஸ் போருக்கு புதிய அனுமதி அளிக்கவில்லை. 

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் | Undeclared War On Iran Donald Drump

அதேநேரத்தில், ட்ரம்பின் நடவடிக்கையை நிறுத்தும் தீர்மானமும் நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை. இதன்படி 60 நாள் காலம் கடந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ போர் அனுமதி வழங்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் “ceasefire காரணமாக 60 நாள் விதி செயல்படாது” என்று கூறுவதும் அரசியல் சாசன முரண்கள் தான்.ஆகவே இந்த விவகாரம் அரசியல், மற்றும் சட்ட ரீதியாக இன்னும் சர்ச்சையாகவே உள்ளது.

ஆகவே ஈரானுடனான போர் மெல்லமெல்ல மறக்கப்பட்டு புதிய விடயங்கள் ஊடகங்களில் பேசப்படும் என்பதே எதார்த்தமாகும். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் ஈரான் மீதான போர் பற்றிய நிலைப்பாட்டை நோக்குவோம். "அமெரிக்காவுக்கு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மிக விரைவில்கொண்டு வருவோம்" என்று டொனால்ட் ட்ரம்ப் 17 ஏப்ரல் 2026 அன்று Reuters- ஊடகத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியிலும், பின்னர் பொதுக்கூட்ட உரையிலும் அவர் “We’ll bring it back to the United States … very soon”எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய அணு வளாகங்களான Fordow, Natanz மற்றும் Isfahan மீது குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் Tomahawk ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது யாவரும் அறிந்ததே. இந்த தாக்குதல் நடவடிக்கையின் மூலம் ஈரானின் அனுவாராய்ச்சி நிலையங்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதக பென்டகன் அறிவித்தது.

டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி, “ஈரானின் முக்கிய அணு செறிவூட்டும் நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன” என்று பதிவிட்டார். பின்னர் அவர் “Operation Midnight Hammer was a complete and total obliteration” என்றும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து “ஈரானிய அணுத்துகள்களை(Nuclear Dust) மீட்டெடுப்பது கடினம்” என 20 ஏப்ரல் 2026 அன்று டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். ஈரானின் யுரேனியம் கையிருப்பை மீட்டெடுப்பது "நீண்ட மற்றும் கடினமான" ஒரு செயல்முறையாக இருக்கும் என்றார். “ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா முழுமையாகத் தகர்த்த போதிலும், அங்கு எஞ்சியிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எந்த நிலையில் உள்ளது அல்லது எங்குள்ளது என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை“ எனவும் பதிவிட்டிருந்தார்.

இத்தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் அணு ஆயுத திறனை கடுமையாக பாதித்ததாக கூறின. ஆனால் சில உளவுத்துறை மதிப்பீடுகள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள், ஈரானின் அணு திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஈரானியர்கள் ஏற்கனவே அணுவாராய்ச்சி வளாகங்களில் இருந்து அனைத்து தொழில்நுட்ப சாதனங்களையும் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட்டார்கள் என்பதனால் அணு தொழில்நுட்பம் சார்ந்து குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பெரும் சேதம் எதனையும் ஈரானுக்கு ஏற்படவில்லை என்றே நம்பப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு, மற்றும் வெளிநாட்டு கொள்கைக் குழுவின் பேச்சாளரான Ebrahim Rezaei, “அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியால், யூரேனியம் செறிவூட்டலை 90% வரை உயர்த்துவது ஈரானின் விருப்பங்களில் ஒன்றாக இருக்கலாம் அதை நாடாளுமன்றம் பரிசீலிக்கும்” என்று 2026 மே 12 ல் தெரிவித்துள்ளார்.அதனை அவர் தனது X (Twitter) தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மீள இணைக்கப்பட்ட தொடருந்து நிலைய தொலைபேசிகள்! 2.9 மில்லியன் கட்டணம் செலவு

மீள இணைக்கப்பட்ட தொடருந்து நிலைய தொலைபேசிகள்! 2.9 மில்லியன் கட்டணம் செலவு

அணு ஆயுத சோதனை

இந்த தகவல் முதன்மையாக மே 12 அன்றே Reuters செய்தி நிறுவனம் Ebrahim Rezaei வெளியிட்ட கருத்தை செய்தியாக வெளியிட்டது. இந்த தகவலை Reuters, Anadolu Agency, Euronews உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது இன்னும் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை அறிவிப்பல்ல.

ஆனால் இது நடைமுறையில் உள்ளது என்பதும், 90% enrichment” என்பது அணு ஆயுத தரத்துக்கு அருகிலான செறிவூட்டல் அளவாக கருதப்பட்டாலும் அது அணு ஆயுத சோதனைக்கு தயாராக இருப்பதாக்கவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தற்போது இது ஒரு எச்சரிக்கையானதும், ஆபத்தானதமான ஒரு அரசியல் அழுத்தமாகவே பார்க்கப்படவேண்டும்.

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் | Undeclared War On Iran Donald Drump

இந்த நிலையில் ஈரானின் அணு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வுரீதியான பார்வையில் இதனை அணுக வேண்டும். இப்போது ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் பற்றியும் அவற்றின் செயல்த்திறன் பற்றியும் நோக்குவோம். ஈரான் தனது அணு திட்டத்தை (nuclear program) ஆராய்ச்சி நிலையங்கள், செறிவு மையங்கள்  எரிபொருள் செயலாக்க நிலையங்கள் மூலம் நடத்துகிறது.

இவை அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகமையின்(International Atomic Energy) கண்காணிப்பில் பகுதியாக உள்ளன என குறிப்பிட்டாலும் சில பகுதிகளில் மட்டுமே முழு கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. இன்று ஈரானின் அணு திட்டம் 4 முக்கிய பகுதிகளாக செயல்படுகிறது.

1)சுரங்கம் மற்றும் மூலப்பொருள் (Mining & Raw material) யுரேனிய தாதுவை எடுப்பு. 2)மாற்றம் மற்றும் செயலாக்கம் (Conversion & Processing) ஸ்பஹான் எரிவாயு (UF₆ gas) தயாரிப்பு. 3)செறிவூட்டல் (Enrichment) நட்றன்ஸ், ஃபோரடோ என்ப யுரேனியம் செறிவூட்டல் (Natanz + Fordow → uranium). 4)ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research & Development) தெஹ்ரான், கராஜ், பல்கலைக்கழக ஆய்வகங்கள்.

ஈரானின் முக்கிய அணு நிலையங்கள் பற்றி வெளித்தெரியும் தகவல்களை நோக்குவோமேயானல் 1. Natanz Nuclear Facility (நட்றான்ஸ் அணுசக்தி நிலையம்)- இந்த நட்றான்ன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் வசதி (Natanz Uranium Enrichment Facility) கொண்ட ஆணு ஆராட்சி நிலையம் ஸ்பகான்(Isfahan) மாகாணத்தில் உள்ளது.

இதுவே ஈரானின் முதன்மை அணு தொழில்நுட்ப மையமும், அணு எரிபொருள் தயாரிப்பின் “மையக் கோர்” முக்கிய யூரேனியம் செறிவு (uranium enrichment) மையமுமாகும். இங்கு யூரேனியம் செறிவூட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மையவிலக்கு சுழற்சிக் கருவிகள் (centrifuges) இயங்குகின்றன. இவை அனைத்தும் மிக ஆழமான நிலத்தடியில் (underground) பாதுகாப்பாக அமைந்துள்ளது.ஆமெரிக்க இஸ்ரேலிய அச்சுறுத்தல் பாதுகாப்பு காரணமாக மிகவும் உறுதியாக கட்டப்பட்டுள்ளது.  

2. Fordow Fuel Enrichment Plant (ஃபோரடோ எரிபொருள் செறிவூட்டும் ஆலை)- இங்கு உயர் நிலை யூரேனியம் செறிவு (high-level enrichment)ஊட்டும் உலைக்களம் உள்ளது. இது கோம்(Qom) நகரத்தின் அருகே மலைக்குக்கீழ் மிக ஆழமான நிலத்தடியில் (mountain bunker) அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ தாக்குதலிலிருந்து பாதுகாப்பாதற்காக குறிப்பாக பங்கபஸ்ர குண்டுகளாலும் தாக்கப்படாதவாறு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது ஈரானின் மிகப் பாதுகாப்பான அணு நிலையங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.

3. Isfahan Nuclear Technology Centre (இஸ்ஃபஹான் அணு தொழில்நுட்ப மையம்)- Isfahan நகரம் அருகே யூரேனியம் மாற்றம் (uranium conversion) செய்யப்பட்டு எரிபொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. இதன் முக்கிய செயல்பாடாக Yellowcake → UF₆ gas ஆக மாற்றுதல் மற்றும் ஆராய்ச்சி உலைகள்(research reactors)உள்ளன. “Yellowcake → UF₆ gas” (Uranium Hexafluoride -யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு) மாற்றம் என்பது அணு எரிபொருள் தயாரிப்பில் மிகவும் முக்கியமான ரசாயன மற்றும் தொழில்நுட்ப கட்டம்.

இது யுரேனியம் மூலப்பொருளை (raw uranium) அணு உலைகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. அத்தோடு இங்கு யுரேனியம் மாற்றம் (Uranium Conversion) செய்வதற்கான ஆராய்ச்சி உலைகள் (Research Reactors) போன்ற அணுச் செறிவூட்டலுக்கான முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

மைத்திரியின் முன்னாள் பிரதம ஊழியருக்கு தண்டனை வழங்குவதில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பநிலை

மைத்திரியின் முன்னாள் பிரதம ஊழியருக்கு தண்டனை வழங்குவதில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பநிலை

எரிபொருள் வடிவமைப்புகள்

இங்கு அணுப்பிரிப்பின் முதற்கட்டமான யுரேனிய கனிமத்தை சுத்திகரித்து Yellowcake என்றழைக்கப்படும் யுரேனியம் ஒக்சைட்டை எனப்படும் (U₃O₈ =Uranium Oxide) மஞ்சள் நிறத் திண்மத் தூள் வடிவத்தோற்றம் கொண்ட இடைநிலைப் பொருளாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த யுரேனியம் ஒக்சைட்டை நேரடியாக அணு உலைகளில் பயன்படுத்த முடியாது.

அதேபோல், இதனை நேரடியாக செறிவூட்டல் (enrichment) செய்யவும் முடியாது. அதாவது யுரேனியம் ஒக்சைட்டை (Yellowcake = U₃O₈) செறிவூட்டல் செய்வதற்கு uranium gas(UF₆ gas) வடிவத்திற்கு மாற்றும் centrifuge (மையநீக்கவிசை) இயந்திரங்கள் மூலம் U₃O₈ ஐ UF₆ gas (யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட்/Uranium Hexafluoride) ஆக மாற்றம் செய்யப்பட வேண்டும். Yellowcake என்ற திண்மத்தை UF₆ என்ற வாயு நிலைக்கு மாற்றுவதானது அணு எரிபொருளாக மாற்றுவதற்கான முக்கிய கட்டம் இந்த இரசாயன மாற்றமேயாகும்.

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் | Undeclared War On Iran Donald Drump

யுரேனியவாயுவான UF₆ (Uranium Hexafluoride) என்பது யுரேனியத்தின் வாயு வடிவ சேர்மம். இது குறைந்த வெப்பநிலையில் கூட வாயுவாக மாறக்கூடிய தன்மை கொண்டது. UF₆ (Uranium Hexafluoride) என்பது சாதாரண வெப்பநிலையில் (room temperature) ஒரு திடப் பொருள் (solid) ஆக இருக்கும். ஆனால் இதன் முக்கிய சிறப்பு என்னவெனில் இது எளிதில் வாயுவாக (gas) மாறக்கூடியது. பொதுவாக பல பொருட்கள் வாயுவாக மாற அதிக வெப்பநிலை (உதா: 100°C, 200°C+) தேவைப்படும்.

ஆனால் UF₆ சுமார் 56°C அளவிலேயே (மிக அதிகம் அல்லாத வெப்பம்) நேரடியாக solid → gas ஆக மாறும். Yellowcake → UF₆ ஆக மாற்றும் செயல்முறை பல கட்டங்களைக் கொண்டது. 1. U₃O₈ → UO₂ மாற்றம் 2. UO₂ → UF₄ (Intermediate compound) 3. UF₄ → UF₆ (Gas form) இந்த இறுதி UF₆ தான் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

செறிவூட்டல்(Enrichment) மற்றும் Centrifuge(மையநீக்கவிசை) இயந்திரங்கள் UF₆ வாயு உருவான பிறகு, அது மையநீக்கவிசை இயந்திரங்கள் (centrifuge) மூலம் செறிவூட்டப்படுகிறது. இதற்காக UF₆ வாயு வேகமாக சுழலும் சிலிண்டர்களில் செலுத்தப்படுகிறது. இதன்போது இலகுவான மற்றும் கனமான ஐசோடோப்புகள் (U-235, U-238) பிரிக்கப்படுகின்றன.

இதன் மூலம் அணு உலைகளுக்குத் தேவையான அளவு U-235 அதிகரிக்கப்படுகிறது. இஸ்ஃபஹான் பகுதியில் உள்ள ஆராய்ச்சி உலைகள் (Research Reactors) அணு விஞ்ஞான ஆய்வுகள், மருத்துவ ஐசோடோப் தயாரிப்பு, புதிய எரிபொருள் வடிவமைப்புகள். போன்ற பணிகளில் நடைபெறுகிறது.

4. Arak Heavy Water Reactor (அராக் கன நீர் உலை)- ஈரானின் Markazi(மார்கழி) மாகாணத்தில் உள்ளது. இங்கு கன நீர் உலை (heavy water reactor)மூலமாக heavy water உற்பத்தி தொழில்நுட்பம் ஆய்வும் மேற்கொள்ளப்படுவதனால் புளூட்டோனியம்(plutonium) உருவாக்கும் திறன் கொண்டள்ளமையால் இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

5. Tehran Research Reactor(தெஹ்ரான் ஆராய்ச்சி உலை)- இது ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள மருத்துவ isotope உற்பத்தி, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். மருத்துவம் (cancer treatment isotopes) பல்கலைக்கழக ஆராய்ச்சி போன்றவற்றினால் முக்கியத்துவம் பெறுகிறது.

சி.ஐ.டியில் முன்னிலையான பவித்ரா வன்னியாராச்சி - வாக்குமூலம் பதிவு

சி.ஐ.டியில் முன்னிலையான பவித்ரா வன்னியாராச்சி - வாக்குமூலம் பதிவு

ஈரானின் அணு திட்டம்

6. Karaj Centrifuge Assembly Center- கராஜ் அணுசக்தி நிலையம் என்றழைக்கப்படும் Karaj Nuclear Facility மையநீக்க விசை இயந்திரத்தின் முக்கிய உதிரிப் பாகங்களின்(centrifuge parts) உற்பத்தி, மற்றும் செறிவூட்டல் உபகரணங்கள்(enrichment) தயாரிப்பு என்பவற்றில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையங்கள் அனைத்தும் “ஆயுத திட்டம்”(weapons program) அல்ல என்று ஈரான் கூறுகிறது.ஆனால் மேற்கத்திய நாடுகள் இது ஈரானின் அணு ஆயுத திறன் உருவாக்கும் அடிப்படை அமைப்பு என சந்தேகிக்கின்றன, குற்றம் சாட்டுகின்றன.

எது எப்படி இருப்பினும் ஈரானின் அணு திட்டம் என்பது ஓரிடத்தை மையம்படுத்தியதை (single place) அல்ல. அது பல நகரங்களிலும் விஸ்தரிக்கப்பட்டு நாடுதழுவிய பரவலாக்கப்பட்ட ஒருங்கிணைத்த ஒரு முழு அணுத்தொழில்நுட்ப வலை அமைப்பு (nuclear network) ஆக செயற்படுத்தப்படுகிறது.

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் | Undeclared War On Iran Donald Drump

இவ்வாறு ஈரான் அணு ஆராய்ச்சி துறையில் தன்னை அதிவேகமாக வளர்த்து வரும் நாடு. அத்தோடு ஏவுகணை தொழில்நுட்பத்தில் அது பலபடிகள் முன்னேறி முதன்மையான ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நாடு. இந்தவகையில் மத்திய கிழக்கில் ஈரான் சக்தி வாய்ந்த நாடாகவே உருவெடுத்து வருகிறது.

ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களும் முற்றுகைகளும் ஈரானை அமெரிக்காவினால் அடிபணி வைக்க அடிபணிய வைக்க முடியவில்லை. ஈரானை அதனுடைய புவிசார் அமைவிட முக்கியத்துவம்தான் அதனை பாதுகாத்து உள்ளது. இதனை ஜெனரல் கோர்மோஸ் ஈரானை தற்காத்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் ஈரான் மீதான போர் முடிவடைந்து விட்டது. பெய்த மழை நின்று விட்டாலும் தூவானம் தொடர்வது போல அவ்வப்போது தாக்குதல்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது. ஆயினும் இந்த யுத்தத்தில் அமெரிக்கா ஈரான் மீது மேற்கொண்ட அழித்தொழிப்பு தாக்குதல்களில் குறிப்பிட்ட வெற்றிகளை பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது பாரசீக வளைகுடாவில் ஈரானுக்கான முதன்மை பாத்திரத்தை கொடுத்து விட்டது மாத்திரமல்ல, கோமோஸ் நீரினையில் ஈரானுக்கு மகுடத்தை சூட்டிவிட்டது என்று சொல்வதே பொருத்தமானது.

தென்னிலங்கை அரசியலை கதிகலங்க வைத்துள்ள மகிந்த - ரணில்! சொந்த செலவில் சூனியம் வைத்த அநுர அரசு

தென்னிலங்கை அரசியலை கதிகலங்க வைத்துள்ள மகிந்த - ரணில்! சொந்த செலவில் சூனியம் வைத்த அநுர அரசு

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US