மீள இணைக்கப்பட்ட தொடருந்து நிலைய தொலைபேசிகள்! 2.9 மில்லியன் கட்டணம் செலவு
நாடு முழுவதும் உள்ள தொடருந்து நிலையங்களின் தொலைபேசிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் நேற்று (25) காலை நாடு முழுவதும் உள்ள தொடருந்து நிலையங்களில் துண்டிக்கப்பட்டிருந்த பொது தொலைபேசி இணைப்புகள், மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
தொடருந்து நிலையங்களின் தொலைபேசிகள்
நேற்று மாலை நிலுவைத் தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தொலைபேசி இணைப்புகள் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் துண்டிப்பால் நாடு தழுவிய தொடருந்து நிலையங்களில் பயணிகளுக்கும் தொடருந்து நிலைய ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்பட்டிருந்ததை தொடருந்து திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன் காரணமாக தொலைபேசி இணைப்புகளை மீண்டும் சரிசெய்ய நேற்று மாலை 29 லட்சம் ரூபா செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து நேற்று மாலை தொடக்கம் தொடருந்து திணைக்களத்தின் அனைத்து தொலைபேசி இலக்கங்களும் மீண்டும் வழமை போல செயற்படத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.