கனடா விமான நிலையம் ஊடாக பயணிக்கும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
கனடாவில் தமிழர்கள் அதிகம் பயணிக்கும் ரொரன்ரோ விமான நிலையத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பொதிகள் மாற்றப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களால் இவ்வாறான மோசடிகள் செய்யப்படுவதாக தெரிய வந்த நிலையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
பயணிகளின் பொதிகள் போலியான முறையில் மாற்றப்பட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து அறியாத 17 பயணிகள் பல நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கி, சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் காரணமாக ரொரன்ரோ விமான நிலையம் ஊடாக பயணிக்கும் தமிழர்கள் தமது பொதிகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் பொதி
விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பொதியில் இருக்கும் Tagயை விமான நிலைய ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அடையாள அட்டையை ஒட்டி விடுகின்றனர்.

குறித்த நாட்டை பயணிகள் சென்றடைந்ததும் விமான நிலையத்தில் வைத்து, போதைப்பொருள் கடத்தல்காரர்களால் அவர்களின் பொதிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
எனினும் சுங்க அதிகாரிகளிடம் பொதி சிக்கினால், அதில் ஒட்டப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில், அப்பாவியான பயணிகள் சிக்கிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam