விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி நடமாட்டம் : நந்திக்கடலில் களம் இறங்கிய சிறப்பு கொமாண்டோ
முள்ளிவாய்க்காலின் இறுதிக் காலப்பகுதியில் அதாவது யுத்தம் நிறைவடைதற்கு இறுதி நாட்களில் என்ன நடந்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்நிலையில் தற்போது இன்னுமொரு கருத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சரத் பொன்சேகா ஏன் இன்றைய காலகட்டத்தில் இந்த கருத்துக்களை தற்போது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்? இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் சீனாவுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இறுதி யுத்தம் குறித்த கட்டளைகளை தான் சீனாவில் இருந்தே மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...