ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (12) மீரிகம வைத்தியசாலையின் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஊடகங்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்
அரசாங்கத்திடம் கோரிக்கை
ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல்வேறு தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதன்படி இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும், சிறைத்துறையிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
ஏனைய தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக நீண்ட காலம் பணியாற்றலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சிலர் இதை எதிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.