பெருமளவு போதைப்பொருள்களை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.பி.யைப் பாதுகாக்கும் அநுர அரசாங்கம் இராணுவ அதிகாரிகளைப் பழிவாங்குவது ஏன்..! சம்பிக்க ரணவக்க கடும் சீற்றம்
போதைப்பொருளுடன் கைதானப் பெண்
மேற்படி சந்தேகநபர் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருள், 538 கிராம் ஹெரோயின் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 14 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan