ஜனாதிபதிக்கு அனைத்து கட்சிகள் தொடர்பில் பசில் வழங்கியுள்ள யோசனை
ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அனைத்து கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa)தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இருவருக்கும் இடையிலான இந்த ஐந்தாவது சந்திப்பு, கொழும்பு(Colombo)மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
இந்த சந்திப்பின் போதே பசில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam