பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
வெளியில் இருந்து ஆதரவு
அதுவரை நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்பது எனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரித் திட்டங்களைப் பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தான் பொது வேட்பாளராகக் களமிறங்க உத்தேசித்துள்ளதால் வெளியில் இருந்துகூட பலரும் ஆதரவு வழங்கலாம் என்ற கருத்தையும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
