மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் பலி
மட்டக்களப்பு - மியான்குளம் பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 பேர் படுகாயம்
புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த 65 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
