மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் உலகம் ..! எச்சரிக்கும் பிரித்தானிய இராணுவம்

Sajithra
in ஐக்கிய இராச்சியம்Report this article
உலகம் மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக பிரித்தானிய (UK) இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா மற்றும் அதன் மேற்கு நட்பு நாடுகள் புதிய அணு ஆயுத மிரட்டல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஆயுத படைகள் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடகின் (Tony Radakin) எச்சரித்துள்ளார்.
லண்டனில் உள்ள Royal United Services Institute (RUSI) பாதுகாப்பு ஆய்வு மையத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பனிப்போர் காலம்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகம் தற்போது மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
பனிப்போரின் காலத்தில் அணு சக்தியின் முதல் யுகம் தொடங்கியதாகவும், அதன் பிறகு ஆயுத குறைப்பு (disarmament) முயற்சிகளுடன் இரண்டாவது யுகம் கடந்ததாகவும், இப்போது உலகம் மூன்றாவது அணு யுகத்திற்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் அணுசக்தி அச்சுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் மீண்டும் பரவலாகி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், இந்த யுகத்தில், ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் பயிற்சிகள், NATO நாடுகளுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளன.
அணு ஆயுதங்கள்
அத்துடன், பல நாடுகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவும், அதிகப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்த நிலையை உருவாக்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டை விளக்கி உரையாற்றிய சர் டோனி, ரஷ்யா நேரடியாக பிரித்தானியாவை தாக்க வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், அணு தடுப்புக்களை உறுதியாகவும் மேம்படுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அணு ஆயுதங்களின் முக்கியத்துவத்தை கூறிய அவர், பிரித்தானியாவின் அணு ஆயுதங்கள் புடினுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் பிரித்தானியாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்களும் ஆயுதங்களும் புதுப்பிக்க முந்தைய அரசுகள் பாரிய முதலீடுகளை செய்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 14 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
