விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான கழிவு தொடர்பில் வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று(20.12.2024) இடம்பெற்ற துறைசார் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“1970ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் எமது மாகாணம் விவசாயத்தில் கோலோச்சியதைப் போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டும்.
விவசாயத்துறை மேம்பாடு
தற்போதைய சூழலுக்கு ஏற்ப எமது விவசாய முறைமைகள் மாற்றமடைய வேண்டும். இளையோரிடத்திலும் விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொள்ளல் அவசியம்.
அத்துடன், வடக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக வழங்கப்படும் உபகரணங்களை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |