வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற நடவடிக்கைகள் பரிந்துரைப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Theepan Dec 20, 2024 08:15 PM GMT
Report

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நேற்று காலை (20.12.2024) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், நெக்டா, நாரா நிறுவனப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

அநுர உட்பட பலருக்கு ட்ரம்ப் விடுக்கவுள்ள எச்சரிக்கை

அநுர உட்பட பலருக்கு ட்ரம்ப் விடுக்கவுள்ள எச்சரிக்கை

பொருளாதார வளம் 

இதன்போது, ஆரம்ப உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தின் பிரதான பொருளாதார வளமாக விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன இருக்கின்ற எனவும் அந்தத் தொழிலை முன்னெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற நடவடிக்கைகள் பரிந்துரைப்பு | Measures To Resolve Problems Of Northern Fishermen

மேலும், கடற்றொழில் சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தனக்குத் தெரியும், அவை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர் ஊடாக எதிர்காலத்தில் இங்கு அடையாளம் காணப்படும் விடயங்களை தீர்த்து வைக்க முடியும என நம்புவதாக கூறியுள்ளார். 

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.

அதனால் ஏற்படும் கடல்வளப் பாதிப்பு மற்றும் ஏனைய தொழிலை முன்னெடுக்கும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகும் தனித்துவமான சில தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகும் தனித்துவமான சில தகவல்கள்

 பிரச்சினைகள் 

அதேவேளை, இதுவரை வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளை மீளாய்வு செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற நடவடிக்கைகள் பரிந்துரைப்பு | Measures To Resolve Problems Of Northern Fishermen

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பாஸ் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் கடற்றொழில் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் எதிர்கொள்ளும் இழப்புக்கள் மற்றும் அவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கப்படாமை தொடர்பிலும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்டத்தால் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை முன்னெடுக்கும் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதில்லை எனவும் இதனால் கடல்வளம் அழிந்து செல்வதாகவும் கடற்றொழிலாளர் அவர்கள் குறிப்பிட்டனர்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற நடவடிக்கைகள் பரிந்துரைப்பு | Measures To Resolve Problems Of Northern Fishermen

அது மாத்திரமன்றி, கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் சில பிரதேசங்களில் வான் தோண்டும் நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

மயிலிட்டி துறைமுகத்தில் 137 இந்தியப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடி தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

கிராமிய சங்கம் மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரு அமைப்புக்கள் கடற்றொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாகவும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில் கருத்து வெளியிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் இங்கு எவ்வாறான விடயங்கள் நடைபெற்றன என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்காலத்தில் இங்கு ஆராயப்பட்ட விடயங்களின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US