வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை விவகாரம்: ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அடையாள அணிவகுப்பு
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேர் கைது செய்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20.03.2024) அடையாள அணிவகுப்பு நடைபெற்ற வேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது, படுகொலையான இளைஞனின் மனைவி மன்றில் தோன்றி , ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் , அன்றைய தினம் வரையில் ஆறு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
