வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Kajinthan Mar 16, 2024 07:29 AM GMT
Report

வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

குறித்த சம்பவத்துடன் கடற்டையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் தனது சொந்தப் பிரேரணையாக எடுத்து குறித்த விசாரணைகளை நேற்றையதினம் ஆரம்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை: வெளியாகிய அதிர்ச்சி காணொளி

வட்டுக்கோட்டை இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை: வெளியாகிய அதிர்ச்சி காணொளி

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் | Vattukkottai Family Murder Case

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர்.

இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற அனுமதி

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற அனுமதி

வைத்தியசாலையில் உயிரிழப்பு

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் | Vattukkottai Family Murder Case

  குறித்த குடும்பஸ்தரின் மரணம் சித்திரவதை செய்யப்பட்டு கூரிய ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் காணொளி காட்சிகளும் வெளியாகியது.

குறித்த காணொளியில் , இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும் , அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும் , வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது. கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் மனைவி முன் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த கடற்படை முகாமுக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய உத்தியோத்தர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

யாழ். வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

மனித உரிமைகள் ஆணைக்குழு

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்,

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் | Vattukkottai Family Murder Case

ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் கடற்கரையினரின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் கொலை தொடர்பில் பொலிசாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலும் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US