விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த லியோனல் மெஸ்ஸி
பிஃபா உலகக் கோப்பையில் நடுவர்களின் சாதகமான தீர்ப்புகளால் ஆர்ஜென்டினா பயனடைந்தது என்ற கூற்றுகளை லியோனல் மெஸ்ஸி நிராகரித்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அதிர்ஷ்டம் அல்லது வெளி உதவியின் விளைவல்ல என்றும், மாறாக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் விளைவே என வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..
ஆர்ஜென்டினாவைச் சுற்றியுள்ள விமர்சனங்கள்
அட்லாண்டாவில் நடந்த போட்டியில், ஆர்ஜென்டினா பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் அந்தோனி கார்டன் இங்கிலாந்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த பிறகு, ஆட்டத்தின் பிற்பகுதியில் என்சோ பெர்னாண்டஸ் மற்றும் லதாரோ மார்டினெஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த இரண்டு கோல்களுக்கும் மெஸ்ஸி வழிவகுத்ததால், நடப்பு சாம்பியன் மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இருப்பினும், இந்த வெற்றியானது ஆர்ஜென்டினாவைச் சுற்றியுள்ள விமர்சனங்களை அடக்கவில்லை. போட்டி முழுவதும் சர்ச்சைக்குரிய நடுவர் முடிவுகள் அணிக்குச் சாதகமாகவே அமைந்ததாகச் சில பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர்.
அந்தக் கருத்துக்களை நிராகரித்த மெஸ்ஸி, கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்ஜென்டினாவின் சீரான ஆட்டமே அதற்குச் சாட்சி என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பை
கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள்தான் சிறந்தவர்களாக இருந்து வருகிறோம். மீண்டும் ஒருமுறை, நாங்கள் உலகின் இரண்டு சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம்.
நாங்கள் செய்ததெல்லாம் தற்செயலாக நடக்கவில்லை என்பதையும், யாரும் எங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டுவது என்பது மிகச் சிலரே சாதிக்கும் ஒரு விடயம், அதை இந்த அணி சாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.
நாங்கள் இங்கிலாந்திடம் தோற்றிருந்தால், மக்கள் வெளியே வந்து சில அர்த்தமற்ற விடயங்களைச் சொல்லியிருப்பார்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் அவர்களை விடச் சிறந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் வரலாற்று நிகழ்வுகள் நடக்கும் இந்த அளவிலான ஒரு போட்டியில், பல விடயங்கள் அடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.
மேலும் மெஸ்ஸி, இந்த வெற்றியை மறைந்த டியாகோ மரடோனாவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்துக்கு எதிராக மரடோனாவின் புகழ்பெற்ற ஆட்டங்கள், உலகக் கோப்பை வரலாற்றின் திருப்புமுனைத் தருணங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan