தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!

CID - Sri Lanka Police Sri Lanka Police Bribery Commission Sri Lanka Dinesh Schaffter
By Kanthan Jul 16, 2026 02:03 AM GMT
Report

இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!

கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!

தப்பிச் செல்வதற்கான முயற்சி

உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.  அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்

பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்.

அன்று  பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி! | Death Of Dinesh Schaffter Ruled A Murder

அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொலை செய்யப்பட்டார்.

இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 2022 இலிருந்து 2026 வரை இந்தக் கொலை மூடிமறைக்கப்பட்டது.மேலும் இந்த விசாரணையை மூடிமறைத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பொய்க் குறிப்புக்களை எழுதிய, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது

பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது

 

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US