இலங்கையில் வீட்டுச் சிறை நடைமுறைக்கான சாத்தியம்
இலங்கையில் புதிய சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வீட்டுச் சிறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்
கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு காரணமான சட்டத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தற்போதைய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது.
போதைப் பொருள் வர்த்தகர்களைப் பாதுகாத்து, நாடு முழுவதும் போதைப்பொருள் பரவுவதற்கு வழிவகுத்த பலர் இன்று சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிவது குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களுக்கு ஆதரவாகச் சென்று தழுவிக் கொண்டவர்கள் இன்று எப்படி பேசுகின்றாரகள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த காலத்தில் நாட்டில் போதைப்பொருள் விஷ்வரூபமெடுப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
இன்று நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், குறித்த நபர்கள் பதற்றமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan