வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா: முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட கூட்டமானது, இன்றையதினம் (24.04.2024) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் 20.05.2024 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
ஆலய திருப்பணிகள்
இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய, ஆலய திருப்பணி வேலைகளை மேற்கொள்ளும் வகையில் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி பாக்குத் தெண்டல் நிகழ்வும் 12ஆம் திகதி தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் 20ஆம் திகதி வைகாசிப் பொங்கல் நிகழ்வும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட பிரதம கணக்காளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











