இலங்கையை உலுக்கிய தியத்தலாவ கோர கார் விபத்து - வெளியான புதிய தகவல்
தியத்தலாவ (Diyathalawa) கார் பந்தய போட்டியின் போது 7 பேரை பலி கொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சாரதிகள் பண்டாரவளை (Bandarawela) நீதவான் நீதிமன்றில் இன்று (24.4.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியத்தலாவ (Diyathalawa) ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏழு பேர் கொண்ட குழு விசாரணை
விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையிலும் மூவர் பதுளை போதனா வைத்தியசாலையிலும் (Teaching Hospital Badulla) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு நடைபாதையில் போட்டியை பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது கார் ஒன்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் (Sri Lanka Army) தீர்மானித்துள்ளது.
விபத்து தொடர்பில் கார் சாரதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு பிணை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
