சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாசவை நியமிக்கும் திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயற்படுவதைத் தடுத்து மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தற்காலிக தலைமைச் செயலர் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றுமொரு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர்களான மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைய கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன்விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணை முடியும் வரை இந்த நிரந்தர தடை நடைமுறையில், இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது.
தடையுத்தரவு
குறித்த தடையுத்தரவானது எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
