இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் விரைவில் மக்களுக்கு
இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
தேசிய மட்டத்திலான வீடமைப்புத் திட்டம்
''மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, 90 கிராமங்களில் 1,668 வீடுகள் கட்டும் பணி இதுவரை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 732 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் 04 வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மட்டத்திலான வீடமைப்புத் திட்டம் தென் மாகாணம், கிராம சக்தி வீட்டுத் திட்டம், வடக்கு மாகாணம், கிராம சக்தி வீடு திட்டம் அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய நான்கு திட்டங்களாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு 600 வீடுகள் என்பதோடு மொத்தமாக 2400 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை 2400 மில்லியன் ரூபாவாகும்.
இதற்கு முன்னர் 807 மில்லியன் ரூபா இதற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1592.7 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
90 வீடுகளின் நிர்மாணப் பணிகள்
இது தவிர, அனுராதபுரம், மஹாவிலச்சிய, அலபத் கிராமம், பூஜ்ய மாதுருவாவில் உள்ள சோபித நினைவு கிராமத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப்பெற்றுள்ளது.
அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 450 மில்லியன் ரூபா. இக்கிராமத்தில் கட்டப்பட உள்ள வீடுகளின் எண்ணிக்கை 115 ஆகும்.

இந்நிலையில், அரசாங்க நிதியில் 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 90 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, இந்திய உதவியின் கீழ் தோட்டபுற வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படைப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, 8445 தோட்டபுற வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 23,646 மில்லியன் ரூபாவை வழங்கும்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam