அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண் மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள நிலை
பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக மெல்பேர்னுக்கு சென்ற இலங்கை மருத்துவ அதிகாரி ஓஷிகா விஜயகுணரத்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்திய அதிகாரி தனது கணவர் மற்றும் சிறிய மகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த நிலையில், அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சிகிச்சையின் போது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்த போதிலும், புற்றுநோய் செல்கள் மீண்டும் கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
புற்றுநோய்
புற்றுநோய் மிகவும் தீவிரமானதாக இருப்பதால், கூடிய விரைவில் சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த சிகிச்கைக்காக ஒரு முறைக்கு ஒரு லட்ச டொலர் செலவிடப்படுகின்றது. அவர் ஒரு சர்வதேச மாணவி என்பதால், அவுஸ்திரேலியாவில் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் அல்லது தனியார் புற்றுநோய் காப்பீடு எதுவும் இல்லாமல் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓஷிகா விஜயகுணரத்னவின் கணவர் பணிபுரிந்து வருவதால், பிள்ளைகள் மற்றும் கல்வி காரணமாக அவர் வேலைக்கு செல்லவில்லை.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவருக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam