இறுதியான தமிழகத்தின் தேர்தல் திகதி! வெளியான அறிவிப்பு..
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கமைய, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
தொடர்ந்து, மே 4ம் திகதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10ஆம் திகதி முடிவடைகிறது.
புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15ஆம் திகதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஆம் திகதியும், அசாம் மாநில சட்டசபை மே 20ஆம் திகதியும், கேரள சட்டசபை மே 23-ஆம் திகதியும் நிறைவு பெறுகிறது.
இதற்கமைய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
செங்கடலை இலக்கு வைக்கும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து மூடப்படும் மற்றுமொரு நீரிணை - கேள்விகுறியாகும் உலக வர்த்தகம்
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri