கே.பியை சுரேஷ் சலே கைது செய்யவில்லை:சம்பவத்தை விபரித்த சரத் பொன்சேகா...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என அறிப்பட்ட கே.பி என்ற குமரன் பத்மநாதனை சுரேஷ் சலே தான் கைது செய்தார் என இப்போது வாயச்சவடால் பேசுபவர்களுக்கு பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா சாட்டையடி ஒன்றை கொடுத்துள்ளார்.
எந்த ஊடகத்திலும் வெளிவராததும் அவர் வெளியிடாத இரகசியமும் இதுவாகும். இணைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
நான் முப்படைகளின் பிரதானியாக இருக்கும் போது ஒரு நாள் இரவு கோட்டாபய தொலைபேசியில் சரத் கே.பியை கொண்டு வந்திருக்கிறார்கள்.உங்களுக்கு தெரியுமா என கேட்டார்.
இலங்கைக்கு கொண்டு வரும்வரை அவர் யார்; என தெரியாது.
கே.பியிடம் கோட்டாபய என்ன பேசினார்
மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர அளவில் வந்த அழைப்பையடுத்து புலனாய்வு குழு ஒன்று மலேசியாவுக்கு சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை விமானத்தில் அழைத்து வந்துபோது அவரை பாரப்படுத்த மலேசியாவில் இருந்து இருவரும் வந்திருந்தனர்.
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை ஒப்படைத்து விட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.இவர் கே.பி உங்களுக்கு பாரப்படுத்துகிறோம் இதன் பின்னர் இவரை நீங்கள் எதையாவது செய்யுங்கள் என அவர்கள் போய்விட்டனர்.
அப்போது தான் சிஐடியினர் கோட்டாபயவுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர்.அதன் பின்னரே கோட்டா எனக்கு சொன்னார்.
கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.சிஐடியில் கொஞ்சம் காலம் இருந்தார்.

ஆனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டவில்லை.பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
கே.பியிடம் இருந்த கப்பல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்று கோட்டாபய தான் அறிவார்.
அதன் பின்னர் கே.பியுடன் டீல் பேசியது மஹிந்தவும் கோட்டாபயவும் தான். அவர்கள் என்ன செய்தார்கள் என எங்களுக்கு தெரியாது.கே.பிக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே கைதுக்குக் கூட்டு எதிரணி கடும் கண்டனம்: ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்!
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam