இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சிக் கொடுத்தாரா! வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்கர்கள் இந்தத் தோற்றங்களை நம்ப வேண்டியதில்லை என்று, பாப்பரசரின் ஒப்புதலுடன் கூடிய ஓர் உத்தரவை வத்திக்கானின் முக்கிய சமயக் கொள்கை அலுவலகம் வெளியிட்டது.
மனிதகுலத்தின் பாவங்கள்
டூசுலேவில் உள்ள ஒரு கத்தோலிக்கத் தாய், 1970களில் 49 முறை இயேசுவைக் கண்டதாகவும், அவர் சில செய்திகளைச் சொன்னதாகவும், அந்த இடத்தில் 24 அடி உயரச் சிலுவையைக் கட்டச் சொன்னதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், இதுகுறித்து ஆராய்ந்த வத்திக்கான், "இந்த நிகழ்வுகள் கடவுளால் ஏற்பட்ட அற்புதமானவை அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கூற்றின்படி, உலகம் 2000-ம் ஆண்டிற்குள் அழிந்துவிடும் என்று இயேசு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. "அந்தக் கணிப்பு நிறைவேறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று வத்திக்கான் கூறியுள்ளது.
மனிதகுலத்தின் பாவங்கள்
மேலும், "ஒரு சிலுவையை மக்கள் உணர, அதற்கு 24 அடி இரும்புக் கம்பிகள் தேவையில்லை. ஒரு மனிதன் மனதார மன்னிப்புக் கேட்கும்போது, அவன் இதயம் திறக்கும்போதுதான் உண்மையான சிலுவை உயர்த்தப்படுகிறது" என்றும் வத்திக்கான் கருத்துத் தெரிவித்துள்ளது.

இதேபோல், வத்திக்கான் சமீபத்தில் மற்றொரு முடிவையும் எடுத்தது. அதாவது, மேரி மாதாவைச் சிலர் "இணை மீட்பர்" என்று அழைப்பதைத் தடை செய்தது.
ஏனெனில், இயேசு மட்டுமே சிலுவையில் இறந்ததன் மூலம் மனிதகுலத்தின் பாவங்களில் இருந்து மக்களைக் மீட்டெடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்.