யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட விவகாரம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இந்த வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

முறையான தகுதிகளைப் பெற்றிருக்காத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட யோஷித ராஜபக்சவை பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம்சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக யோஷித ராஜபக்ச ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரித்தானியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வைத்திய பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்