கடற்படை பதவிக்காலத்தில் பல்வேறு முறைப்பாடுகள்! யோஷித ராஜபக்சவை துரத்தும் விசாரணைகள்
இலங்கைக் கடற்படையில் இணைந்து கொண்டது தொடக்கம் யோஷித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாக்கள், விசேட வரப்பிரசாதங்கள் குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ச, கடந்த 2006ம் ஆண்டு கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
துரத்தும் விசாரணைகள்
அத்துடன் கடற்படையில் போதிய அனுபவமோ, எந்தவொரு விசேட திறமையோ வெளிக்காட்டாத நிலையில் குறுகிய காலத்துக்குள்ளாகவே அவர் பிரித்தானிய ரோயல் கடற்படையின் விசேட பயிற்சிநெறியொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அத்துடன் கடற்படையில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் மேற்கண்ட விடயங்கள் குறித்து இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
அதனடிப்படையில் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்க நேரில் வருகை தருமாறு யோஷித ராஜபக்சவுக்கு இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam