அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் ஆய்வு முடியாததால் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதம்
அகமதாபாத்தில் கடந்த 2025 ஜூன் 12 அன்று நேரிட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர், இது கடந்த பத்தாண்டுகளில் உலகில் நடந்த மிக மோசமான விமானப் பேரிடராகக் கருதப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து:
விமானத்தின் எஞ்சின்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமையடையாததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்று விசாரணை அமைப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்து முதலாம் ஆண்டு நிறைவடைவதையொட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டியிருந்த நிலையில், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள ஜிஇ ஏரோஸ்பேஸ் எஞ்சின்களின் ஆய்வு முடிந்து இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் எஞ்சின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ஒரே நேரத்தில் "RUN" நிலையிலிருந்து "CUTOFF" நிலைக்கு மாற்றப்பட்டு, எஞ்சின்களுக்கான எரிபொருள் தடைபட்டதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இறுதி அறிக்கை
இதனால் விமானி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த விபத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய எஞ்சின் முகாமைத்துவ அலகு குறித்த விரிவான ஆய்வுகள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் தற்காலிக இடைக்கால அறிக்கையை வெளியிட்டால் அது தேவையற்ற வதந்திகளுக்கும் தவறான புரிதல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இந்திய விமானிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri