வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இடம்பெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1 வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
பகிரங்க வாக்கடுப்பிற்கு ஆதரவாக
இந்நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும் முன்மொழியபட்டது.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடாத்துவதா என கோரப்பட்டது.

இதன் பொழுது பகிரங்க வாக்கடுப்பிற்கு ஆதரவாக 19 வாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு 9 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பில் கந்தையா யசீதன் தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிடிபி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசு கட்சியின் 13வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி 6 வாக்குகளை கொண்டிருந்த பொழுதிலும் நடுநிலை வகித்தது.

இதேவேளை உப தவிசாளராக பேரின்ப நாயகம் சுபாகரின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பிலும் மற்றும் தர்மகுலசிங்கம் உதயகுமாரின் பெயர் சங்கு சைக்கிள் கூட்டணியின் சார்பில் முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்ப நாயகம் சுபாகர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam