ஈரான் - இஸ்ரேல் யுத்தம்! மக்களை தவறாக வழிநடத்தும் பொறுப்பற்ற இலங்கையர்கள்
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் இருப்பதால் கலன்களின் எரிபொருளைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்ளுமாறு நபரொருவர் வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றது.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் இருப்பு தொடர்பான தளம்பல் நிலை காணப்படுகின்றது.
பெட்ரோலுக்கு தட்டுப்பாடு இல்லை..
எவ்வாறாயினும், இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் போதுமானளவு கையிருப்பு இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், மத்தியக் கிழக்கில் போர்ப்பதற்றம் தொடங்கியவுடன், உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பித்த நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் எரிபொருளுக்கான வரிசைகள் தோற்றம் பெற ஆரம்பித்தன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு உள்ளிட் பல பகுதிகளில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
எனினும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவித்தார்.
இருப்பினும், பொதுமக்கள் பெரிய கலன்களில் எரிபொருளை சேமித்து வைப்பதோடு, ஏனையவர்களுக்கும் பற்றாக்குறை தொடர்பான போலியான அச்சத்தை தோற்றுவிக்கின்றனர்.
அதனையும் தாண்டி ஒரு சிலர், எரிபொருள் வரிசையில் காத்திருப்பதோடு, பிரச்சினையை மிகவும் தீவிரமாகக் காட்டி ஏனையவர்களையும் எரிபொருளை சேமித்து வைக்க தூண்டும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதேசமயம், கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருந்து, எரிபொருள் பற்றாக்குறை, அதிகரித்த எரிபொருள் விலை என்று இலங்கையர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
எனவே, எரிபொருள் பற்றாக்குறை என்றால் சாதாரணமாகவே இலங்கையர்களிடத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்படுவடுது என்பது இயல்பானதே.
இருப்பினும், சிலரின் போலியான பிரசாரங்களின் காரணமாக பொதுமக்கள் பதற்றப்படுவதுடன் பாதிப்புக்களையும் எதிர்நோக்குகின்றனர்.
மத்திய கிழக்கின் போர்ப்பதற்றம் காரணமாக உலகவாழ் மக்கள் பாரிய அச்சம் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற பொறுப்பற்ற சிலரின் சுயநல செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், இது போன்ற கடிமான தருணங்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
