60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்
60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)தெரிவித்துள்ளன.
சுமார் 120 வெடிகுண்டுகள் இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை
இவை ஈரானின் இராணுவ ஏவுகணை உற்பத்தி மையங்களையும், ஈரானின் அணுஆய்வு மையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.
இரவு நேரத்தில், ஈரானும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் சில தாக்குதல்கள் பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஈரான் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
