கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பயணி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனது பயணப் பையில் இருந்து 10 மில்லியன் மதிப்புள்ள குஷ் போன்ற போதைப்பொருளை கடத்த முயன்ற நபர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 இல் வசிக்கும் 34 வயதுடைய வர்த்தகர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையில் 1 கிலோகிராம் 10 கிராம் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானப் பயணி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.