37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP

Jaffna Northern Province of Sri Lanka Local government election Sri Lanka 2025
By Theepan Jun 20, 2025 11:43 AM GMT
Report

37 வருடங்களின் பின் EPDP இன் ஆதரவோ கூட்டோ இல்லாமல் ஊர்காவற்துறை பிரதேச சபையை தமிழ்த்தேசிய கட்சிகள் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 

இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்

தெரிவு செய்வதற்கான அழைப்பு

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.

37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP | Ahila Ilankai Thamil Congress Kayts Pradeshiya

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராவுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பிரதித் தவிசாளர் தெரிவு

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP | Ahila Ilankai Thamil Congress Kayts Pradeshiya

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தலா 3 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் - இஸ்ரேல் யுத்தம்! மக்களை தவறாக வழிநடத்தும் பொறுப்பற்ற இலங்கையர்கள்

ஈரான் - இஸ்ரேல் யுத்தம்! மக்களை தவறாக வழிநடத்தும் பொறுப்பற்ற இலங்கையர்கள்

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்

37 வருடங்களாக EPDP ஆட்சி அமைத்து வந்த நிலையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் கைகளில் ஊர்காவற்துறை பிரதேச சபை கிடைத்திருக்கிறதுள்ளமைஅ குறிப்பிடத் தக்கது. 

You may like this,


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US