தணியும் சுதந்திரத் தாகம்.. யாழில் இடம்பெறவுள்ள விசேட கருத்தரங்கு
"என்று தணியும் சுதந்திரத் தாகம்" என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்..
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் விமர்சகர் நிலாந்தன் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri