ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற தடுப்பூசிகள் ஏற்றும் நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பதினான்கு சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில்
நடைபெற்று வருகின்றது.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 47 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
