இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவாகியுள்ள திடீர் மாற்றம்
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.09 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலரின் விற்பனை பெறுமதி 312.43 சதமாக காணப்படுகிறது.
நேற்றைய நிலவரம்
இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.97 ரூபாவாகவும், டொலரின் விற்பனை பெறுமதி 312.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 342.17 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர் அதிகரிப்பை பதிவு செய்து வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
