புத்தாண்டு நேரத்தை கணிப்பதில் பாரிய தவறு: ஜோதிடர்கள் அமைப்பு குற்றச்சாட்டு
இந்த ஆண்டு புத்தாண்டு நேரத்தை கணிப்பதில் பாரிய தவறு நடந்துள்ளதாக தேசிய ஜோதிடர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் ரொஷான் சானக திசேரா இதனை கூறியுள்ளார்.
மேலும், இவ்வருடம் அடுப்பு மூட்டுவதற்காக அரச சுபக்குழு வழங்கிய நிகழ்ச்சிநிரலில் சிக்கல் நிலை காணப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சுப நிகழ்ச்சி அட்டவணை
இதன்படி அரச சுபக்குழு வழங்கிய சுப நிகழ்ச்சி அட்டவணையில் சதி காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு வேளைகளில் புத்தாண்டு மங்கள காரியங்களை முன்னெடுப்பதன் மூலம் சிறுவர்களுக்கு மங்கள காரியங்களைப்பற்றிய புரிதல் காணப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவ்வருடம் அரச அனுசரணை சபையினால் அடுப்பு மூட்ட வழங்கப்பட்ட நேரம் ஜோதிடத்திற்கு புறம்பானது எனவும் நள்ளிரவு வழங்கப்பட நேரத்தை மாற்றியமைத்து மறுநாள் காலை ஜாதகத்தை பரிந்துரைக்கவேண்டும் எனவும் வலையுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |