பசிலின் கோட்டையைக் கைப்பற்றிய ரணில்

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Rakesh Mar 06, 2024 05:16 PM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.

மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.

2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 65.76 சதவீத வாக்குகளுடன் 13 ஆசனங்களை மொட்டுக் கட்சி கைப்பற்றியது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றம் பதிவு

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றம் பதிவு

மொட்டு கட்சி உறுப்பினர்கள்

மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

பசிலின் கோட்டையைக் கைப்பற்றிய ரணில் | Ranil Captured Basil S Fort

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர். அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார்.

அவர் தற்போது சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ச, பிரதிப் விதான, மிலான் ஜயதிலக்க ஆகியோரே மொட்டு கட்சி பக்கம் நிற்கின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

அரசியல் முடிவுகள்

எனினும், நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே பங்கேற்றுள்ளார். கம்பஹா மாவட்டம் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது.

அந்த மாவட்டத்தில் போட்டியிட்டே அவர் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேவேளை, பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மொட்டுக் கட்சி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

பசிலின் கோட்டையைக் கைப்பற்றிய ரணில் | Ranil Captured Basil S Fort

இந்தச் சந்திப்பின் பின்னர் தீர்க்கமான சில அரசியல் முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன . தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் பசில் ராஜபக்சவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அண்மைய மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஜனக ரத்நாயக்க முக்கிய தகவல்

அண்மைய மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஜனக ரத்நாயக்க முக்கிய தகவல்

பெரும்பான்மை பலம்

"ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். புத்தாண்டு முடிந்த பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும். அதில் பெரும்பான்மைப் பலத்தை மொட்டுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் முடியும் வரை ரணிலுக்கு ஆதரவு வழங்குவோம். அதன்பின்னர் ஆதரவு இல்லை. முதலில் நாடாளுமன்றத் தேர்தலே நடத்தப்படும்.

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசுவோம்." - என்று உதயங்க வீரதுங்க மேலும் கூறினார். பசில் ராஜபக்ச மார்ச் 5 ஆம் திகதி நாடு திரும்புவார் என்ற தகவலை முதன்முதலில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி மார்ச் 10 ஆம் திகதி முதலாவது மக்கள் கூட்டத்தை குருநாகல், குளியபிட்டியவில் நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சி அழைப்பையேற்று ரணில் விக்ரமசிங்க பங்கேற்பார் எனவும், சுமார் ஒரு வருடங்களுக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க அரசியல் மேடையேறுகின்றார் எனவும் அவர் ஐ.தே.கவின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி - மெட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி - மெட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US