அமெரிக்காவின் வரி விதிப்பை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது: சஜித் கேள்விக்கணை

Donald Trump Sri Lanka United States of America
By Rakesh Jul 11, 2025 03:07 AM GMT
Report

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரிக்கு அரசு எவ்வாறு முகம் கொடுக்கப்போகின்றது? கடைப்பிடிக்கப்போகும் கொள்கை யாது? அரசின் பதில் என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்வை வரி விதிப்பு குறித்து விசேட கருத்தை வெளியிட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

எதிர்மறையான தாக்கம்

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல்

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல்

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார். இது இலங்கை நாட்டின் ஏற்றுமதிகளின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

us donald trump

ஆடை, தேயிலை, இறப்பர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்குக் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை இது கொண்டு வரும். நமது நாட்டின் ஏற்றுமதியில் 26.4 சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகின்றது. 2024ஆம் ஆண்டில் நமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

30 வீத தீர்வை வரி விதிக்கப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும். இந்தக் கட்டமைப்பு சார் வர்த்தக நிலுவை தொடர்ந்து நீடித்து வரும். ஏற்றுமதி இடங்களைப் பல்வகைப்படுத்துவதன் மூலமே இதைத் தவிர்க்கலாம். விதிக்கப்பட்ட 44 வீத வரி 30 வீதமாகக் குறைக்கப்பட்டமையானது நமது நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பலர் கருதினாலும், இவ்வளவு உயர் மட்ட தீர்வை வரியை விதிப்பதானது நமது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும்.

பெரும் தாக்கம்

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி

இதனால் வியட்நாம் மற்றும் வங்களாதேசம் போன்ற நாடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். ஆடைத் துறையில் நாம் கொண்டிருக்கும் உயர் தயாரிப்பு நாமத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். பெறுமதி சேர் தேயிலை மற்றும் இறப்பர் சார்ந்த பொருட்களுக்கும் இதனால் பெரும் தாக்கம் ஏற்படும்.

sajith premedhasa

தற்போதைய அரசு இந்தப் பிரச்சினையைக் கண்டு, நமது நாட்டுக்குச் சிறந்த தீர்வைக் காண தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றதா என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினை எழுவதற்கு முன்பே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசுக்கு நாம் எச்சரிக்கை விடுத்தோம்.

நாட்டுக்காக, மக்களுக்காக, ஏற்றுமதித் துறைக்காக இராஜதந்திர ரீதியான கடமை இதில் நிறைவேற்றப்பட்டதா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் சரியாக பின்பற்றப்பட்டதா என்பதிலும் பிரச்சினை இருக்கின்றது.

அரசின் மீது அதிகபட்ச அழுத்தம்

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன், குறிப்பாக இலங்கையுடன் உறவுகளைக் கொண்டவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அவர்கள் மூலம் அமெரிக்க அரசின் மீது அதிகபட்ச அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். வரிச் சட்டத்துக்கு இரு அவைகளிலும் குறைந்த பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டதால், நமது நாடு இந்த சூழ்நிலைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு பொருத்தமான செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும்.

donald trump

இந்த வாய்ப்பை அரசு முறையாகப் பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வி உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் மூலம் செலுத்தக் கூடிய அழுத்தம் முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் காணப்படுகின்றது. இந்தத் தீர்வை வரிகள் விதிக்கப்படுவது நமது நாட்டின் பல்வேறு துறைகளின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்கு அரசு வழங்கும் பதில்களும் தீர்வுகளும் என்ன? நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தொழில் இழப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடுதல் என்பன சமூகப் பேரழிவை உருவாக்கக்கூடும். இது வறுமை அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினைக்கான தெளிவான தீர்வை அரசிடமிருந்து அறிந்து கொள்வது எமக்கு அவசியம். எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கும், மக்களுக்கும், ஏற்றுமதித் துறைக்கும் தன்னால் முடிந்த அதிகபட்ச ஒத்துழைப்பை இதற்குப் பொற்றுத் தரும் என குறிப்பிட்டுள்ளார். 

வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US