வரிப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தவறாகக் கையாண்டுள்ளது.. எழும் கடுமையான விமர்சனங்கள்!
அமெரிக்காவுடனான வரிப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தவறாகக் கையாண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விமர்சித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் சிறந்த சலுகைகளைப் பெறத் தவறிவிட்டது என்றும் பேச்சுவார்த்தைகளின் போது தெளிவான உத்திகளை கையாளவில்லை என்றும் கூறியுள்ளார்.
வர்த்தக ஏற்றத்தாழ்வு
மிகவும் மூலோபாய அணுகுமுறையுடன், இலங்கை அதிக நன்மைகளை அடைந்திருக்கலாம் எனவும் பட்டியலிடப்பட்ட நாடுகளிடையே மிக உயர்ந்த வரி குறைப்புகளை பெற்றிருக்கலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அமெரிக்காவுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி செய்து 368 மில்லியன் அமெரிக்க டொலர்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வையும் அவர் எடுத்துரைத்தார்.
எனவே, 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக இடைவெளியை நிவர்த்தி செய்யவும், பொருளாதார உறுதியற்ற தன்மையைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



