அமெரிக்க வரியின் எதிரொலி! அடுத்த 12 மாதங்களில் அமெரிக்க டொலர் ஏற்றுமதியில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை இறக்குமதிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்படும் 10 சதவீத வரிக்கு மேலதிமாக 30 சதவீத வரிகளுடன் மொத்தமாக 40 சதவீதமாக அமெரிக்கா வரிகளை உயர்த்தியுள்ளதால் அடுத்த 12 மாதங்களில் இலங்கைக்கு 1.2–1.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இழப்பு ஏற்பட சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு எச்சரிக்கை மணி என குறிப்பிடும் முன்னாள் தூதுவர் கனநாதன் இலங்கை வரையறுக்கப்பட்ட சந்தைகளை அதிகமாக நம்பியிருப்பது, புத்தாக்கத்தை கொண்டிராதமை, அதிக உற்பத்தி செலவுகள் என்பன அதன் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவும் எச்சரித்துள்ளார்.
ஏற்றுமதி இழப்பு
மலேசியா அல்லது வியட்நாமைப் போலவே செலவுத் திறன், விசேட தயாரிப்புகள் மற்றும் பல்வகைப்படுத்தலை நோக்கி நகர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க இறக்குமதியாளர்கள் வியட்நாம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற மலிவான சந்தைகளுக்கு மாறக்கூடும் என்றும், இது வெளிநாட்டு நேரடி முதலீட்டை, குறிப்பாக ஆடைத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைத் தழுவி, பிராந்திய ஒத்துழைப்பை (SAARC, BIMSTEC) மற்றும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்துவதன் மூலமான ஒரு மூலோபாய மறுசீரமைப்பின் அவசியத்தையும் முன்னாள் தூதுவர் கனநாதன் வலியுறுத்தியுள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
