கல்வி அமைச்சின் செயலாளர் குற்றவாளியாக்கப்படுவாரா! நுகேகொடை நீதிபதி பிறப்பித்த உத்தரவு
புதிய கல்வி சீர்திருத்தங்களின் போது தரம் 6 முன்மாதிரி புத்தகம் ஒன்றில் ஏற்பட்ட தவறுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவாவை சந்தேக நபராகப் பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நுகேகொடை நீதவான் ருவந்திகா மாரசிங்க குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள்
புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையின் கீழ், ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பிலே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையதளத்தின் முகவரி வேண்டுமென்றே, தவறுதலாக அல்லது அலட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஒப்புவிக்க விரிவான விசாரணையை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி கையேடு மற்றும் அச்சிடப்பட்ட தொகுதியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் செய்த முறைப்பாடு தொடர்பாக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக கல்வி வல்லுநர்கள் சங்கம் மற்றும் தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த போதே நீதிபதி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.