உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம்

Jaffna Sri Lanka Cricket Sri Lanka Government Sports ICC Champions Trophy
By Kajinthan Feb 01, 2026 02:48 PM GMT
Report

புதிய இணைப்பு 

இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.02.2026) வாகன பேரணியாக எடுத்து வரப்பட்டுள்ளது.


இலங்கையின் பல்வேறு நகரங்களுக்களுக்கும் உலகக் கிண்ணம், எடுத்துச் செல்லப்பட்டு வரும் நிலையில், இன்று வடக்குக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணம்

அந்தவகையில், இன்று பிற்பகலில் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது.

யாழ் .மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலப்பு பண்பாட்டு நடனத்தை தொடர்ந்து வெற்றிக் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

இதனைத் தொடர்ந்து நல்லூர் ஆலய முன்றலில் வெற்றிக் எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், துரையப்பா விளையாட்டரங்கிலும், யாழ்.கேட்டையிலும், யாழ்.பொது நூலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன. 

மேலதிக தகவல் - தீபன்

முதலாம் இணைப்பு

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்று(01.02.2026) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று காலை 7.30க்கு தம்புள்ளையில் இருந்து எடுத்து வரப்படும் உலகக் கிண்ணமானது 8.30க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 10.30 மணிக்கீ வவுனியா நகரத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் வைக்கப்படவுள்ளது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம்

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 3.30க்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25க்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும், 6.20க்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40க்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10க்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

அந்தவகையில், உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்

நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்

  

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிரான இன்றைய போராட்டம்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிரான இன்றைய போராட்டம்

வவுனியா

ரி20 உலகக் கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று (01.02.2026) வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

ரி20 உலக கிண்ண வெற்றிக் கிண்ணம் இந்த முறை இலங்கையில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் வேலை பெற்றுத்தருவதாக பலரை ஏமாற்றிய பெண்

பிரித்தானியாவில் வேலை பெற்றுத்தருவதாக பலரை ஏமாற்றிய பெண்

இதனையடுத்து குறித்த வெற்றிக் கிண்ணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பார்வைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

அந்தவகையில், பலத்த பாதுகாப்புடன் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக் கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

மேலதிக தகவல் - திலீபன்

கிளிநொச்சி

உலகக்கிண்ண T20 வெற்றிக்கேடயமானது, வடமாகாணத்திற்கு இன்று (01.02.2026) பார்வைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, கிளிநொச்சிக்கு பிற்பகல் 12.30 உலகக்கிண்ணம் கொண்டு வரப்பட்டிருந்தது.

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினர் உலகக்கிண்ணத்தை வரவேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை துடுப்பாட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கிண்ணத்தை பார்வையிட்டனர். 

உலகக் கிண்ணம் சுற்றுப்பயணம் இன்று தமிழர் பகுதியில்.. ரசிகர்கள் உற்சாகம் | World Cup Trophy Display In Jaffna Today

மேலதிக தகவல் -  தேவந்தன்


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US