துருக்கி மாணவியை வீதியில் முகமூடியுடன் கைது செய்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்
அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துருக்கிய நாட்டு பெண்ணை, அமெரிக்க கூட்டாட்சி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடு வீதியில் முகமூடி அணிந்து கொண்டு ககைது செய்துள்ளனர்.
குறித்த பெண் காரணம் இல்லாமல் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில் அந்த பெண் கைது செய்யப்படும் காணொளியும் வெளியாகியுள்ளது.
30 வயதான ருமேசா ஓஸ்டுர்க் என்ற துருக்கிய பெண், நண்பர்களைச் சந்திக்க சோமர்வில்லில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
திடீர் கைது
இதன்போது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் முகமூடி அணிந்த முகவர்கள், அவரை வீதியில் கைது செய்துள்ளதுடன் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newly circulated footage reveals the moment masked ICE agents abducted Turkish academic and research assistant at Tufts University, Rumeysa Ozturk, as they announced that she would be deported.
— Quds News Network (@QudsNen) March 26, 2025
She was abducted for publishing an article criticizing Israel, describing its actions… https://t.co/iSikzSrBnn pic.twitter.com/Q2gYbJsFzs
இந்நிலையில், சோமர்வில்லில் உள்ள ஒரு வளாகத்திற்கு வெளியே உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே இன்று மாலை ஒரு சர்வதேச பட்டதாரி மாணவர் கூட்டாட்சி அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன என்று டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்திற்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது எனவும் மேலும் சம்பவத்திற்கு முன்னர் கூட்டாட்சி அதிகாரிகளுடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை, இது நடந்த இடம் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
விசா இரத்து..
மேலும், ”எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில், மாணவரின் விசா நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்தத் தகவல் உண்மையா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயல்கிறோம்.
மாணவரின் கைதுக்கான காரணம் அல்லது சூழ்நிலைகள் குறித்து இந்த நேரத்தில் பல்கலைக்கழகத்திடம் கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை, மேலும் சம்பவம் பற்றி மேலும் அறிய முயற்சிக்கிறது.
பல்கலைக்கழக நெறிமுறையைப் பின்பற்றி, தனிநபர் எங்கள் உதவியைக் கோரினால், மாணவர் வெளிப்புற சட்ட ஆதாரங்களுடன் இணைக்க பல்கலைக்கழக ஆலோசகர் அலுவலகம் உதவும்” என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

வீட்டிற்கு வந்த ரோஹினியை அடித்து வெளுத்த விஜயா, பாட்டி செய்த காரியம்... அடுத்தவார சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
