இலங்கையிடம் உதவி கோரிய உக்ரைன் ஜனாதிபதி
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் இலங்கையின் ஆதரவை தமது நாடு எதிர்பார்க்கிறது என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த கருத்தானது முக்கியத்துவம் மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ஆதிக்க நிலைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் குறித்த கோரிக்கை உக்ரைன் இலங்கையிடம் எதிர்பார்க்கும் நிலைப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.
வர்த்தகம், கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் உக்ரைன் ஆர்வமாக இருக்கின்றது எனபது உக்ரைனின் கருத்துக்களில் இருந்து வெளிப்படுத்திய ஒன்று.
உக்ரைனுக்கான புதிய இலங்கைத் தூதர் ஹசந்தி திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்த போதே இந்த விடயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கான இலங்கை மற்றும் குவாத்தமாலாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வின் போது இந்த சந்திப்பு நடந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி,
“தனது நாடு அமெரிக்க பிரதிநிதிகளுடன் முக்கியத்துவம் மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகியது.
விரைவில் அமைதியை அடைய பாடுபடுகின்றோம்.
மேலும் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு தேவையான அடித்தளத்தை அமைப்பதற்கு உக்ரைன் பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
இந்த நிலைப்பாட்டிற்கு மற்ற நாடுகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
உக்ரைனின் இறையாண்மை
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்பதில் நிலையான நிலைப்பாட்டிற்காக குவாத்தமாலா மற்றும் அதன் ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உக்ரைன் நட்புரீதியான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதை எதிர்நோக்குகிறது.
கல்வி மற்றும் அறிவியலில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதிலும் கட்சிகள் கவனம் செலுத்தின.
கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் குவாத்தமாலாவில் ஒரு தூதரகத்தைத் திறக்க உக்ரைன் விரும்புகிறது.என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |