தாக்குதலுக்கு எதிரான அழுத்தம்: பாரிய திட்டங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைகிறார் பிளிங்கன்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த விஜயம் இன்று இடம்பெறுவதுடன், நாளை அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிளிங்கனின் விஜயம் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
போர்நிறுத்த பேச்சுவார்த்தை
அவரது பயணத்தின் போது, போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பரந்த பிராந்திய மோதல்கள் குறித்து விவாதித்த பின்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸால் கடந்த ஆண்டு அக்டோபர் 7திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு காசா மீதான அதன் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நகர்த்துகிறது.
உடனடி போர்நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டது.
இஸ்ரேலிய தாக்குதல்
உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் கிட்டத்தட்ட 40,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் 92,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக, காசாவின் பல பகுதிகள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து இன்றி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |