ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை முதலிலேயே குறி வைத்த அதிகாரி
அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொல்லப்பட முன்னரே இரகசிய பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் குறித்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய பொலிஸ் அதிகாரி
டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டு இருந்த போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.
இதன்போது, குறித்த தாக்குதல்தாரியை ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாிரகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளில், ட்ரம்ப் தாக்கப்பட சிறிது முன்னரே தாக்குதல்தாரியின் துப்பாக்கியை இரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிவைத்து தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பொலிஸ் அதிகாிரியின் தாக்குதலில் கொலையாளி விழுந்துள்ளதுடன் சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்தே ட்ரம்பை தாக்கியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |