பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை
மொரட்டுவையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த 23 வயதான யுவதியை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயதுடைய விற்பனை ஆலோசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை
பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் தனக்கு மோசமான காணொளி மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வருவதாக கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நடிகா திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
