அரசியலில் களமிறங்கும் மங்களவின் உறவுக்கார பெண்
அமரர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உறவினரான பெண்ணொருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார்.
மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன, அரசியல் செயற்பாட்டில் இணைந்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளார்.
மாவட்ட அமைப்பாளர்
சஞ்சல குணவர்தனவை, மாத்தறை மாவட்ட அமைப்பாளராக கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ நியமித்துள்ளார்.

இலங்கையில் பிரபல்யமான அரசியல்வாதிகளில் மங்கள சமரவீரவும் ஒருவராவார்.
அவரின் மறைவின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதலாவது நபராக சஞ்சல குணவர்தன திகழ்கிறார்.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri